சங்கரன்கோவிலில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் பங்கு பெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சமத்துவ சீருடை அணிந்து 108 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்தனர். இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியை தலைமை செயற்குழு உறுப்பினர் யூ,எஸ்,டி சீனிவாசன், தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன், சிவகிரி கழக செயலாளரும், மாநில மருத்துவர் அணி துணை செயலாளருமான டாக்டர்.செண்பக விநாயகம், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.