காணியாளம்பட்டி அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
காணியாளம்பட்டி அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
காணியாளம்பட்டி அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பொங்கல் விழா என முப்பெரும் விழா கரூர் முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், ஆசிரியர்கள் பழனிச்சாமி, ஜெயசீலி, வீரபத்திரன் உள்ளிட்ட பள்ளி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குடும்பத்தை வழி நடத்துவதில் பெரிதும் துணை நிற்பது ஆண்களே! பெண்களே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் கருணாகரன், புத்தக வாசிப்பும் இளைஞர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பூமி ராஜ் தங்க நாணயங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.