நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் கூடாரவல்லி திருவிளக்கு பூஜை
அரங்கநாதா் கோயில் மண்டபத்தில் உற்சவ மூா்த்திகளாக காட்சியளித்த சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாா் பல்வேறு வகை மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாமக்கல், அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாதம் அதிகாலை பக்தர்கள் பஜனையுடன், திருப்பாவை,திருவெம்பாவை பாடி, சுவாமி தரிசனம் செய்வர் ஞாயிற்று கிழமைகளில் விளக்கேந்தி நாமக்கல் மலைக்கோட்டையை நகர் வலம் வருவர்.மார்கழி கடைசி ஞாயிற்றுக்கிழமை கூடாரவல்லி நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், நாமக்கல் இந்து சமய பேரவை திருப்பாவை குழு சார்பில் கூடாரவல்லி,பல்லாண்டு படி விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அரங்கநாதர் கோவில் படிவாசலில், பெண்கள் வாழையில் குத்து விளக்கு தீபம் ஏற்றி வைத்து பல்லாண்டு படி விழா நடந்தது 7மணிக்கு கூடாரவல்லி உற்சவம் நடந்தது. அதில் பல்வேறு மலர்களால் கூடாரம் அமைத்து அதில் அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதன்பிறகு பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை திருப்பாவைக் குழுவினா் செய்திருந்தனா்.