போச்சம்பள்ளி: பொங்கலை ஒட்டி மாடுகளை அலங்கரிக்க தேவையான அலங்கார பொருட்கள் விற்பனை சுறுசுறுப்பு.
போச்சம்பள்ளி:பொங்கலை ஒட்டி மாடுகளை அலங்கரிக்க தேவையான அலங்கார பொருட்கள் விற்பனை சுறுசுறுப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான அலங்கார கயிறுகள் விற்பனை நடைபெற்றது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகவும் ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கும் பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரித்து அவற்றின் கழுத்தில் புதிய அலங்கார கயிறுகள் மற்றும் மணிகள் கட்டுவது வழக்கம். இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.