தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பணவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருத்தானூர் கிராமத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி லெனின் இருப்பை பதிவு செய்ய சென்ற காவலர் மாரிராஜா என்பவரை ரவுடி லெனின் அரிவாளால் வெட்டி விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருவிழா காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் இருப்பை காவல்துறையினர் பதிவு செய்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வரும் நிலையில் தைப்பொங்கல் திருவிழா வருவதை ஒட்டி சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளின் இருப்பை பதிவு செய்யும் பனியில் பனவடலிச்சத்திரம் காவல் நிலைய காவலர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் கருத்தா நூர் கிராமத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின் இருப்பை அறிவதற்காக அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த போது எதிர்பாராத விதமாக அரிவாளை எடுத்து வந்த லெனின் காவலர் மாரி ராஜாவின் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதனை அடுத்து வெட்டு காயங்களுடன் இருந்த காவலர் மாரிராஜாவை மீட்ட காவல்துறையினர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் ரவுடி லெனினை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடிக்க சென்ற காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..