கரூரில்,அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய திமுகவினர்.
கரூரில்,அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய திமுகவினர்.
கரூரில்,அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய திமுகவினர். தமிழர்களின் பண்பாட்டு கலாச்சாரத்தை விளக்கும் பொங்கல் விழாவை தமிழக மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொங்கல் பானையில் பொங்கி வந்த பொங்கலை பார்த்து "பொங்கலோ பொங்கல்" என கூறியும்,பொங்கல் விழா கொண்டாட வாய்ப்பு அளித்த தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். சூரிய பகவானுக்கு படையல் இட்ட பொங்கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்