சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில்

விவேகானந்தர் பிறந்தநாள் விழா

Update: 2025-01-12 10:53 GMT
சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்தநாளை  தேசிய இளைஞர் தினமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இளைஞரணி மாவட்ட தலைவர் கௌதம் தலைமையில், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு முன்னிலையில் இன்று சேலம் ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டத்து. தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோபிநாத், முருகேசன்,அண்ணாதுரை, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News