சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி போக்சோ வழக்கில் கைது
சேலம் மத்திய சிறையில் அடைப்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது . இங்கு சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் தேவராஜன் (வயது 50). சேலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது தந்தை இறந்துவிட்ட காரணத்தால் அவரது பணியை தனக்கு வழங்குமாறு மனு செய்திருந்தார். இதற்காக வாரம் இரு முறை ஊராட்சிகள் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் வந்து அதிகாரிகளை சந்தித்து சென்று வந்தார். இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் சூப்பிரெண்டாக பணியாற்றி வரும் தேவராஜன் என்பவர், அந்த பெண்ணிற்கு அடிக்கடி செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இது குறித்து அந்த பெண் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதன் பேரில் விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டனர். டவுன் மகளிர் போலீசார் விசாரணை செய்து நேற்று தேவராஜனை போக்சோ வழக்கில் கைது செய்தனர் . இதன் பின்னர் தேவராஜன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.