சத்தம் போட்டதை கேட்ட தொழிலாளிக்கு கத்திகுத்து 

குமரி

Update: 2025-01-12 07:51 GMT
குமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் சைபன் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜோசப் மனோ (42). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜெயகுமார் (48). மின்வாரிய தற்காலிக தொழிலாளி.  10ம் தேதி இரவு 9.00 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்து அவரது மனைவியிடம் சத்தம் போட்டு பேசிக் கொண்டு இருந்துள்ளார்.       அப்போது அங்கு வந்த ஜோசப் மனோ ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறாய் என்று ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயக்குமார் என்பவர் ஜோசப் மனோவினுடைய தலையில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஜோசப் மனோ பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் ஜெயக்குமார் மீதுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News