கைவிடப்பட்ட மூதாட்டிக்கு கைக்கொடுத்த நல் உள்ளங்கள்!
தூத்துக்குடியில் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு ஆதரவளித்த மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடியில் கைவிடப்பட்ட மூதாட்டிக்கு ஆதரவளித்த மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தூத்துக்குடி மாதவன்நாயர் காலனி பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மூதாட்டி நாகக்கனி என்பவர் மழையிலும் வெயிலிலும் ரோட்டோரத்தில் இருந்து உள்ளார். இது குறித்து மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மூதாட்டியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளையினர் இரத்ததானம் மற்றும் சாலையோர ஆதரவற்றோர்களுக்கு தங்களது நண்பர்கள் உதவியுடன் சமூக சேவைகள் செய்து வருகின்றனர்.