நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் அழகரசன் மற்றும் நிர்வாகிகள்
கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் சேலம் அழகரசன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலாளர் சேலம் மா.பா.அழகரசன் ஆகிய நான் மற்றும் சேலம் மாநகர் மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் மற்றும் எங்களுடன் பயணித்த 100 க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் இன்று முதல் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலகிக் கொள்கிறோம். இதுநாள் வரை ஒத்துழைப்பு நல்கிய உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.