பொங்கல் பொருள் விநியோகம்

தேர்தல் ஆணையத்திடமிருந்து அனுமதி கிடைத்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்

Update: 2025-01-12 04:07 GMT
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு கடந்த 9-ந் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொங்கல் தொகுப்பு மறு அறிவிப்பு வரும் வரை வழங்கப்படாமல் இருந்து வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 100 ரேஷன் கடைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக ரேஷன் கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. இதற்கிடையே மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜகோபால் சுன்கரா பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கேட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறை விதிகள் உள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கும்போது அரசியல் கட்சியினர் ஈடுபாடு இருத்தல் கூடாது, இத்திட்டம் தொடர்பாக அரசியல் கட்சியினர் புகைப்படம் எதுவும் இல்லாமல் விளம்பரம் இருக்க வேண்டும். தேர்தல் நடத்தை தொடர்பான அனைத்து விதிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மூன்று நிபந்தனைகளை பின்பற்றி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பான தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி - சேலை ஆகியவற்றை வழங்கும் பணி நடைபெற்று இன்று தொடங்கியுள்ளது. இன்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உங்கள் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மக்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். வரும் 13ஆம் தேதிக்குள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உங்கள் தொகுப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Similar News

தீ விபத்து