சூலூர்: பொங்கல் கொண்டாட்டத்தில் ஜிம்பாவே மாணவர்கள் !

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து தமிழர் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2025-01-12 04:10 GMT
கோவை, அரசூர் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஜிம்பாவே நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடியது கவனத்தை ஈர்த்தது.இந்த விழாவில், தமிழர் பாரம்பரிய நடனங்கள், வீர விளையாட்டுகள், கிராமிய அலங்காரம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, ஜிம்பாவே மாணவர்கள் வேட்டி, சட்டை, சேலை அணிந்து துடிப்பான நடனத்தை ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.இதுகுறித்து பேசிய மாணவர்கள், பாரம்பரிய உடை அணிவது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்ததாகவும், தமிழர் பண்பாட்டை நெருங்கி அறியும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.இந்த நிகழ்வு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து தமிழர் திருநாளைக் கொண்டாடிய சிறப்பான தருணமாக அமைந்தது.

Similar News

தீ விபத்து