கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மாணவ மாணவிகள் முளைப்பாரி எடுத்தும், கும்மியாட்டம், காவடியாட்டம், கரகாட்டம் ஆடியும் விழாவை கொண்டாடினார்கள்.;
பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ரோவர் கல்விக்குழும மேலாண் தலைவர் முனைவர் வரதராஜன் விழாவிற்கு தலைமை தாங்கினார். கல்வி அறக்கட்டளை உறுப்பினர் மகாலட்சுமி மற்றும் துனைத்தலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் க.இறைவன் அருட்கனி அய்யநாதன் வரவேற்று பேசினார். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், தோட்டப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளும், பேராசியர்களும் சமத்துவ பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என்று வின்னதிர முழங்கி இயற்கையை வழிபட்டனர். மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக, கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் முளைப்பாரி எடுத்தும், கும்மியாட்டம், காவடியாட்டம், கரகாட்டம் ஆடியும் விழாவை கொண்டாடினார்கள். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும், உதவிப் பேராசிரியர்களுக்கும் கல்லூரியின் மேலாண் தலைவர் முனைவர் வரதராஜன் பரிசுகளை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சேவற்சண்டை போட்டி நடத்தப்பட்டது. ஆசிரியர் ஆலோசகர் அப்துல் ரகுமான் விழா நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்து, விழாவை சிறப்பாக நடத்தினார். விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் ஜெயசீலன், அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர். மூன்றாமாண்டு மாணவர் வினோத்குமார் நன்றியுரை ஆற்றினார்.