ஆடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்க கோரிக்கை

கோரிக்கை;

Update: 2025-01-12 06:22 GMT
ஆடுதுறை ரயில் நிலையத்தில் ரிசர்வேஷன் கவுண்டர் தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுவை திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் நேரில் வழங்கி ஆடுதுறை ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். ஆடுதுறை பகுதி பயணிகளின் நலன் கருதியும், நவக்கிரக கோயில்களின் மையப் பகுதியாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி ரிசர்வேஷன் கவுண்டர் வசதி தொடங்குவது மற்றும் ஜனசதாப்தி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை, ஸ்டேஷனில் அடிப்படைக் கட்டமைப் புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தேவையான கோரிக்கைகளை ஆடுதுறை ரயில் பயணிகள் நலச்சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஆடுதுறை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் அழகு பன்னீர் செல்வம், செயலர் முருகேசன், பொருளாளர் பைஸ் அஹமது, மற்றும் துணை செயலர் மாரிமுத்து ஆகியோர் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்திலும், கோட்ட வணிகவியல் அலுவலகத்தில் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து விரைவில் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என ஆடுதுறை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Similar News