கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல்லில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது;
திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அகரம் பிரிவு அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த மோகனமூர்த்தி(20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.