காவேரிப்பட்டணம்: தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்.
காவேரிப்பட்டணம்: தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டி கோபிகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தலைவர் எம்.கே.எஸ்.மாதன் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.