குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (37). இவருக்கு சொந்தமான டெம்போவை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்னால் நிறுத்தி இருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது வண்டியில் இருந்த பேட்டரி மற்றும் ஜாக்கியை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது சம்பந்தமாக ஜெகன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த அஜி (37) என்பவர் திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்து பேட்டரி மற்றும் ஜாக்கியை மீட்டனர்.