மது பாக்கெட்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது!
கர்நாடகா மது பாக்கெட்டுகளை கடத்தி விற்பனை
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் போலீசார், மாமண்டூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கர்நாடகா மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து,காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.