பர்கூரில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.

பர்கூரில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.

Update: 2025-01-13 01:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் புகையில்லா போகியை கொண்டாட தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் விஜயன் முன்னிலை வகித்தார். பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்ட பொது பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தூய்மை காவலர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News