எம்எல்ஏ தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
தர்மபுரி தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் சார்பில் பாரதிபுரம் பகுதியில் நேற்று மாலை சமத்துவ பொங்கல் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் சமத்துவ பொங்கல் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரியின் சார்பில் சமத்துவ பொங்கல் கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள். பாட்டு போட்டி உரியடித்தல், கயிறு இழுத்தல்,மியூசிக் சேர் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சமத்துவ பொங்கல் வைத்து அனைவருக்கும் சமத்துவ பொங்கல் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார் உடன் நல்லம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் பெரியசாமி மகேஸ்வரி. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடினார்.