துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா பந்தயம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பந்தய வீரர்கள் மற்றும் மாடுகள் பங்கேற்ற நிலையில் ₹4 லட்சம் ரொக்க பணமும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பந்தய வீரர்கள் மற்றும் மாடுகள் பங்கேற்ற நிலையில் ₹4 லட்சம் ரொக்க பணமும், பரிசுகளும் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் அடுத்த கண்ணப்பாளையம் சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.புழல் நாராயணன் ஏற்பாட்டில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்து கொண்டு ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். சிறிய ரக மாடுகள் முதல் பெரிய ரக மாடுகள் வரை 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்ற ரேக்ளா பந்தயத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த மாடுகள் 4 சுற்றுகளாக பங்கேற்றன.கண்ணம்பாளையம் முதல் கொசப்பூர் வரை 4 கி.மீ. தூரம் வரை நடைபெற்ற போட்டியில் 4 சுற்றுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ₹4 லட்சம் ரொக்க பணமும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன.முன்னதாக ரேக்ளா பந்தையத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னேற்பாடாக ரேக்ளா ரேஸுடன் ஆம்புலன்ஸ் உடன் சென்றது.100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.