குத்தாட்டம் போட்டு பொங்கல் விழா கொண்டாட்டம்
மதுரை விமான நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
மதுரை விமான நிலையத்தின் சார்பில் பொங்கல் விழா நேற்று (ஜன.13) ஏற்பாடு செய்யப்பட்டு விமானநிலைய பணியாளர்கள் விமான நிலைய வளாகத்தில் பொங்கல் வைத்தனர். தமிழர்களின் பாரம்பரிய கரகாட்ட கலைஞர்கள், கிராமிய இசைக் கலைஞர்கள் நடனம் ஆடினர். இதனைக் கண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாரம்பரிய கலைஞர்களுடன் சேர்ந்து குத்தாட்டமிட்டு பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.