மஞ்சள் கிழங்கு அறுவடை தீவிரம்.
மதுரை பாலமேடு பகுதியில் மஞ்சள் கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர் எர்ரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொத்துமஞ்சள் அதிக அளவில் பயிரிடப்பட்டு தற்போது தை பொங்கலை முன்னிட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. வருடம் தோறும் கொத்து மஞ்சள் நடவு செய்து மார்கழி 25ஆம் தேதிக்கு பிறகு அறுவடை நடைபெற்றுவது வழக்கம். ஏக்கர் ஒரு லட்சம் முதல் ஒன்னறை லட்சம் வரை விலை போகும் ஆகையால் ,இதில் நல்ல லாபம் உள்ளது . மழை நேரங்களில் நோய் தாக்கினால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது. அப்போது எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொத்து மஞ்சள் மகசூல் குறைவாகவே உள்ளது என்றும் பொங்கல் தொகுப்பில் கொத்து மஞ்சள் கொடுத்திருந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்தனர்.