மின் வேலியில் சிக்கிய கொத்தனார் பலி.

மதுரை உசிலம்பட்டி அருகே மின் வேலியில் சிக்கி இறந்தவரின் உடலை கண்மாயில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2025-01-14 01:16 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனுார் அருகே உ.புதுக்கோட்டை கண்மாய்க்குள் உச்சிக்கண்ணம்பட்டி கொத்தனாராக உள்ள ரஞ்சித்(25) மற்றும் ஒரு ஆடு ஆகியோரின் இறந்த உடல்கள் கிடந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில். கண்மாய் அருகே உள்ள வயலில் நெல் பயிரிட்டுள்ள பெரியகருப்பன் (65,) என்பவர் வனவிலங்குகளை தடுக்க அமைத்திருந்த மின் வேலியில் சிக்கியதில் பலியானது தெரிந்தது. திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்து இருந்ததால், உயிர்பலியால் தனக்கு பாதிப்பு எதுவும் ஏற்படலாம் எனக் கருதி, இறந்த உடல்களை கண்மாய்க்குள் துாக்கிப் போட்டதாக பெரியகருப்பன் போலீசாரிடம் தெரிவித்தார்.

Similar News