உற்சாகமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு.
மதுரை அவனியாபுரம் உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
தமிழர் திருநாள் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று ( ஜன.14) மந்தை அம்மன் கோவிலில் கிராம கமிட்டி, மாநகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் சார்பாக சாமி கும்பிட்டு வாடிவாசலில் பூஜையில் நடைபெற்று பின் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் உறுதிமொழி ஏற்ற பிறகு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இன்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். ஜல்லிக்கட்டில் வென்ற சிறந்த காளைக்கு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீருக்கு நிசான் காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.