மதுரையில் மதுபானம், இறைச்சி விற்பனைக்கு தடை

மதுரையில் நாளை மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-01-14 01:33 GMT
மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவள்ளுவர் தினம் நாளை (ஜன.15) கொண்டாடப்படுகிறது. எனவே நாளை அனைத்து வித இறைச்சிகளுக்கான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை நாளை விற்பனை செய்யக்கூடாது. இதற்கான கடைகளை திறக்கவும் கூடாது. விதிமீறி செயல்படுவோரின் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு உத்தரவின்படி மதுக்கடைகள் நாளை மூடப்படுகிறது. இதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், பார்கள், மதுபானக் கூடங்கள் நாளை (ஜன.15) மூடியிருக்க வேண்டும். நாளை எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது. மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News