சேலத்தில் குட்கா விற்பனை செய்த தந்தை, மகன் கைது

போலீசார் நடவடிக்கை

Update: 2025-01-14 01:50 GMT
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கந்தம்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 65), அவரது மகன் மாதேஸ்வரன் (38) ஆகிய 2 பேரும் மளிகை கடை எதிர்புறம் உள்ள ஒரு அறையில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து குட்காவை பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News