சேலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

போலீசார் விசாரணை

Update: 2025-01-14 02:03 GMT
சேலம் சூரமங்கலம் தர்மன் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 38). கட்டிட தொழிலாளி. இவருக்கு நந்தினி (32) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பாபுவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த பாபு நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News