திருமயம்:புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் மது பானம் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு காரைக்குடி அருகே ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பொதுப் பெட்டியில் பயணம் செய்த அருப்புக் கோட்டையை சேர்ந்த பிரபு(25) என்ப வரது பையில் புதுச்சேரி மதுபானம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.