வாகன சோதனையால் லாரி டிரைவர் பீதி கால்வாயில் நிறுத்திவிட்டு தப்பியோட்டம்!

குற்றச்செய்திகள்

Update: 2025-01-14 02:36 GMT
பொன்னமராவதி: புதுக்கோட்டை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் செந்தில், உதவியாளர் ஆரிபாட்சா ஆகியோர் பொன் னமராவதி அருகே செம்பட்டல் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி நோக்கி மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினர். ஆனால், லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேக மாக ஓட்டிச்சென்று சாலையோரம் இருந்த கால் வாய்க்குள் இறக்கி நிறுத்திவிட்டு தப்பியோடிவிட் டார். இதையடுத்து தனி வருவாய் அலுவலர் செந்தில் லாரியை பறிமுதல் செய்து பொன்னமராவதி போலீ சில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News