டாஸ்மாக் கடை வாசலில் மது பாட்டில் விற்பனை பறிமுதல்

மயிலாடுதுறை அருகே திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை செய்த 2 பேர் கைது; 1680 மது பாட்டில்கள் பறிமுதல்;

Update: 2025-01-16 04:51 GMT
, மயிலாடுதுறையை அடுத்த மணல்மேட்டில் வெளிச்சந்தையில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தலைமையில் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு டாஸ்மாக் மதுபான கடை முன்பு வெளிச்சந்தையில் டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்து வந்த மாரிமுத்து(40) தியாகராஜன்(72) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சோதனையில் 35 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 1680 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News