உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடலை குடும்பத்தினர்;
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குமார் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் நேற்று (ஜன.15) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மார்ச்சுவரி பகுதியில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது 10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் நேற்று இரவு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இறந்த நவீன் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 3 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்த நிலையில் இன்று (ஜன.16)நவீன் குமாரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து அவரின் உடலை பெற்று விளாங்குடிக்கு எடுத்துச் சென்றனர் இதனால் இப்பகுதியில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.