வாணியம்பாடி அருகே அரசு பேருந்து கவிழ்த்து விபத்து
வாணியம்பாடி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 30 க்கு மேற்பட்டோர் படுகாயம்;
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அருகே சாலையோர 30 அடி விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து, 10 பயணிகள் காயம்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர உள்ள 30 அடி விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 10 பயணிகள் காயமடைந்து நிலையில், அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அவர்களை சிகிச்சையிற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து, அரசு பேருந்தை நிலத்தில் இருந்து மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்..