பேருந்து நிறுத்தம் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்
சின்னாங்குப்பம் பகுதியில் பேருந்து நிறுத்தம் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னக் குப்பத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் சூழலில் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் ஏராளமான சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோரும் விவசாயிகளும் உள்ளனர. இதனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் செய்ய வேண்டி சேலம் அரூர் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் நிறுத்தி செல்ல வேண்டும் என பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பேருந்துகள் தொடர்ந்து இப்பகுதியில் நிறுத்தப்படாமல் சென்று வருவதை அடுத்து, சின்னங்குப்பம் பகுதியில் பேருந்துகள் நிற்காமல் செல்வதை கண்டித்து நேற்று ஜனவரி 17 மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி மறியலில் ஈடுபட்டவர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மேலும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.