புதுக்கோட்டை மாவட்டம் பொக்கிசகா ரன்பட்டியில் வயல்வெ ளியில் உள்ள தண்ணீர் இல்லாத 100 ஆடி ஆழ முள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற புதுக்கோட்டை யை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முத்துராம லிங் கம் மற்றும் கிராமத்தை சேர்ந்த சிலர் இதை பார்த்து மயிலை மீட்க முயற்சி செய்தனர். மீட்க முடியாததால் வனச்சரக அலுவலர் சதாசிவத்தை தொடர்பு கொண்டு முத் துராம லிங்கம் தெரிவித் தார். இதையடுத்து வன சரக ஊழியர் சதீஷ்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) ராஜசே கரன், மீட்பு படையினர் கார்த்திகேயன், தங்கம் ஆகியோர் விரைந்து சென் றனர். தீயணைப்பு வீரர் கள் கயிற்றின் உதவியுடன் கிணற்றில் இறங்கி மயிலை பாதுகாப்பாக மீட்டனர்.