தவெக கட்சி கொடியை ஏற்றி வைத்த வடக்கு மாவட்ட செயலாளர்.
மொடையூர் மற்றும் ஈயக்கொளத்தூர் கிராமத்தில் பெயர் பலகை திறப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மொடையூர் மற்றும் ஈயக்கொளத்தூர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிளை பலகையை திறந்து வைத்து கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். போளூர் அடுத்த மொடையூர் மற்றும் ஈயக்கொளத்தூர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சி பெயர் பலகை திறந்து வைத்து அதனை தொடர்ந்து திருவண்ணாமலை தவெக வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமை வகித்து கட்சி கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்விற்கு சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் உடன் சேத்துப்பட்டு மேற்கு ஒன்றிய செயளாலர் ஆண்ட்ரூஸ், மொடையூர் ஊராட்சி தவெக கிளை தலைவர் பிரபாகரன், கிளை செயலாளர் நரசிம்மன், இயகொளத்தூர் ஊராட்சி கிளை தலைவர் அருணகிரி, கிளை செயலாளர், தனசேகர், சேத்பட்டு நகர தலைவர் முருகன், நகர செயலாளர் பிரவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.