சங்கரன்கோவிலில் காய்கனி நாளங்காடி இன்று காலையில் திறப்பு
காய்கனி நாளங்காடி இன்று காலையில் திறப்பு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு காய்கனி நாளங்காடியை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் திறந்து வைத்து முதல் வியாபாரம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சபாநாயகர், நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் சரவணன், நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.