அப்பாய் தெரு பகுதியில் குடிபோதையில் ரகளை வாலிபர் கைது
திருப்பத்தூர் பகுதிஅப்பாய் தெரு பகுதியில் குடிபோதையில் ரகளை ஈடுப்பட்ட வாலிபர் கைது;
திருப்பத்தூர் மாவட்டம் அப்பாய் தெரு பகுதியில் குடிபோதையில் ரகளை வாலிபர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அப்பாய் தெரு பகுதியைச் சேர்ந்த டெல்லி பாபு மகன் தினகரன் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் ஹரிஷ் (20) ஆகிய இருவரும் கடந்த 17ஆம் தேதி இரவு குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தினகரன் காயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர் இதுகுறித்து தினகரன் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் ஹரிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.