திருப்பத்தூர் அருகே முத்து மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா
திருப்பத்தூர் அருகே முத்து மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஸ்ரீமுத்துமாரியம்மன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ நவகிரகம் திருக்கோயிலின் ஆலய மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என்று சாமி தரிசனம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் ஏரிகோடி கிராமம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில் நூதன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மற்றும் மாலை நேரங்களில் யாக வேள்வி அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் மங்கள இசை, 2ஆம் கால யாக வேள்வி பூஜை, அதன் பின்னர் தம்பதிகள் சங்கல்பம் நடைபெற்று 9 மணி அளவில் கோபுரத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ நவக்கிரகம் பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஹாகும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி ஓம் சக்தி என்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் செல்வம் மற்றும் முனியப்பன் முருகன் கோயில் பூசாரி, மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.