ஆற்காடு: தீப்பற்றி எரிந்த குப்பை சேகரிக்கும் வாகனம்
திடீரென தீப்பற்றி எரிந்த குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம்;
ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு வாகனத்தில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. வாகனத்தின் அடிப்பகுதி முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில் அதனை கண்ட ஊழியர்கள், தீயணைப்பான் கருவி மற்றும் தண்ணீரை பயன்படுத்தி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், அங்கு நிறுத்தி வைக்கப் பட்டு இருந்த மற்ற வாகனங்கள் பாதுகாக்கப்பட்டது. குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.