தப்பிக்க முயற்சித்த வாலிபர் கால் எலும்பு முறிவு
திண்டுக்கல் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்த வாலிபரை பிடிக்க சென்ற போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்து கால் எலும்பு முறிவு
திண்டுக்கல் பழனி பைபாஸ் பகுதியில் ராமசாமி என்பவரை முகேஷ்குமார் (எ) ரெட்(22) கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்து சென்றது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன், சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு முகேஷ்குமார் (எ) ரெட்டை பிடிக்க சென்றபோது போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்து கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று கூட பாராமல் மனிதாபிமான அடிப்படையில் முகேஷ்குமார் (எ) ரெட்டை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.