தென்காசியில் கட்டிட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கட்டிட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

Update: 2025-01-22 07:12 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள வடகரை பேரூராட்சியில் ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பில் புதிதாக பேரூராட்சி அலுவலக கட்டிடம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 16 லட்சம் மதிப்பில் நூலக கட்டிடமும் கட்டப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த இரு கட்டிடங்களையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லை வரும்போது திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் கட்டிடங்களை நேற்று (ஜனவரி 21) தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பல அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Similar News