போலி ரேஷன் கார்டு, ஆதார் அட்டை தயாரித்த புகாரில்

2 பெண்கள் கைது

Update: 2025-01-22 07:23 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள இ- சேவை மையத்தில், சட்ட விரோதமாக போலி ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவை தயாரிக்கப்படுவதாக, வேதாரண்யம் போலீசருக்கு வந்த தகவலின் பேரில் போலீசார் அதிரடியாக, இ- சேவை மையத்தில் சோதனை செய்தனர். சோதனையில், இ- சேவை மையத்தில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவை சிக்கியது. இவற்றை தயாரித்தது தொடர்பாக, அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த ரஞ்சிதம் (42), சித்ரா (31) ஆகிய 2 பெண்களை வேதாரண்யம் போலீசார் கைது செய்தனர். மேலும், போலி ரேஷன் கார்டு, ஆதார் அட்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினி, பிரிண்டர், லேமினேஷன் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக, ஆதம் ஆரிப் முத்தலிப் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News