கோவை: காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞர் படுகாயம் !
கோவை, காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு ஊராட்சி பகுதியில் நேற்று இரவு நடந்த காட்டு யானை தாக்குதல் சம்பவம் பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு ஊராட்சி பகுதியில் நேற்று இரவு நடந்த காட்டு யானை தாக்குதல் சம்பவம் பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தோண்டை செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்த ஜான் @ சதீஷ்குமார் (23) என்பவர் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த காட்டு யானை மூவரையும் துரத்தியது. மற்ற இருவர் தப்பி ஓடிய நிலையில், ஜான் மட்டும் யானையின் கோபத்திற்கு ஆளாகி வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். படுகாயமடைந்த ஜான், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.