கள்ளச்சாராய வழக்கில் ஜாமின்

ஜாமின்;

Update: 2025-01-22 04:59 GMT
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களில் இரண்டு பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில், 68 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. வழக்கினை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றவர்கள், சப்ளை செய்தவர்கள் என 24 பேரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இதில், குண்டர் தடுப்பு சட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். கைதாகி சிறையில் இருந்தவர்களில், அரிமுத்து,65; என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டது.

Similar News