ஆனந்தாபேட்டை சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலத்திற்கு, பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆனந்தாபேட்டை - ரெட்டிப்பேட்டை இடையே செல்லும் மஞ்சள்நீர் கால்வாயின் குறுக்கே, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறுபாலம் உள்ளது.இந்த பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கானவாகனங்கள் சென்றுவருகின்றன. பாலத்தின் இரு ஓரங் களிலும், பாதுகாப்புக்காக தடுப்புச்சுவர் போலபில்லர்களில் பொருத்தப் பட்டிருந்த இரும்பு குழாய்கள் துருப்பிடித்துஉடைந்து விட்டன. தற்போது, பில்லர்கள் மட்டுமே உள்ளதால்,இப்பாலத்தின் வழியாக நடந்து செல்லும் சிறுவர்கள், முதியோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி கள், கனரக வாகனத்திற்கு வழிவிட பாலத்தின் சாலையோரம் ஒதுங்கும் போது, கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஆனந்தாபேட்டை -- ரெட்டிப்பேட்டை இடையே உள்ள மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலத்திற்கு, பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்திஉள்ளனர்.