கச்சிராயபாளையம் அரசு பள்ளியில் கேமராக்கள் திருட்டு

திருட்டு;

Update: 2025-01-23 03:50 GMT
கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை பகுதியில் அரசு பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் உள்ள பெண்கள் விடுதியில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கேமராக்களை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News