சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மரக்கன்றுகள் நடவும் மழை நீர் சேமிக்கவும் பாலித்தீன் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்தவும் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரிக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க காற்று நீர் மண் மாசுபாட்டை காக்கவும் உறுதி ஏற்றுக் கொண்டனர்.;

Update: 2025-01-23 17:08 GMT
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து கலை விழிப்புணர்வு பிரச்சாரம் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ம பிரபாகரன் துவங்கி வைத்தார். பின்னர் மரக்கன்றுகள் நடவும் மழை நீர் சேமிக்கவும் பாலித்தீன் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்தவும் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரிக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க காற்று நீர் மண் மாசுபாட்டை காக்கவும் உறுதி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பழனி குமார் சார் பசுமை தூதர் கிருஷ்ண தேவராஜ் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முகமது உசேன், குரும்பலூர் கல்லூரி முதல்வர் இந்தோ அறக்கட்டளை மேலாளர் செல்வகுமார் மற்றும் திவ்யா AEC அறக்கட்டளை முத்தமிழ்செல்வன் கேட் அறக்கட்டளை அரனாரை சிவப்பிரகாசம் ஜீவா அறக்கட்டளை எஸ் ஆர் மகேஸ்வரி இளைஞர் அமைப்பு பொறுப்பாளர் சத்யா துளிகள் அறக்கட்டளை சிவா மரக்கட்டளை பயிர் அறக்கட்டளை பொறுப்பாளர்கள், மூத்த சமூக ஆர்வலர் ஜெயராமன் சமூகப் பணி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இன்றைய நிகழ்வு புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி TELC பள்ளி துறைமங்கலம், குரும்பலூர் அரசு கல்லூரி வேப்பந்தட்டை மற்றும் ஈடன் கார்டன் பள்ளியில் நிகழ்ச்சி நடந்தது.

Similar News