மாணவன் பலி
மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி திங்களூர் அருகே பரிதாபம்;
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா திங்களூர் அடுத்த பாண்டியம்மாபாளையம், பனங்காட்டு காலனியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு நிஷாந்தன் (17) என்ற மகன் இருந்தார். நிஷாந்தன் கவுந்தப்பாடியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நிஷாந்தின் தாயார் குளிப்பதற்காக தண்ணீரை காய வைக்க வீட்டில் இருந்த எலட்ரிக் ஹீட்டரை தண்ணீர் பக்கெட்டில் போட்டு வைத்திருந்தார். அப்போது அங்கு சென்ற நிஷாந்தன் எதிர்பாராத விதமாக பக்கெட்டில் உள்ள தண்ணீரை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் நிஷாந்தன் அலறினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு நிஷாந்தின் பெற்றோர் ஓடி வந்து மகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர் ஏற்கனவே நிஷாந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.